அம்மன் வழிபாடும் வன்னியர் குல
சத்திரியர்களும்
காளி /துர்கை / அம்மன்
வழிப்பாடு
வட தமிழகத்தில் தருமபுரி
பகுதியில் மிக அதிகமாக ஒவ்வொரு ஆண்டும் அனைத்து வன்னியர் குல சத்திரியரும் தலைமையேற்று அம்மன் வழிபாடு செய்கின்றனர். பூஜை
செய்வது எல்லாம் வன்னியர் குல சத்திரியர் மட்டுமே
பொது வழிப்பாடு
ஊர்
அம்மன் , மட்டும் பொதுவாக எல்லா வன்னியர் குல சத்திரியர் ஊர்களில் வழிப்படுவர் .
அதனுடன் அந்தந்த வட்டார வழக்குடன் மற்ற அம்மனை வழிப்படுவர் . அதாவது செல்லியம்மன்
, கொல்லி மாரியம்மன் உள்ளிட்ட அம்மனையும் வழிப்படுவர் .
மகாகாளி வழிப்பாடு தனியாக ஓர் நாள் நடத்தப்படும்
வன்னியர் குல சத்திரியர் அனைவரும் இதை வழிப்படுவர், சில
ஊர்களில் சில மாற்றம் இருக்கும் .
புலி
, சிங்கம் , பசு , கருடம் , வில் இதற்கு
உருவம் செய்து இவை தன் குல தெய்வமாக தன் குல சின்னமாக வைத்து வழிப்பாடு
செய்வார்கள். காலைப்பொழுதில் நெருப்பு
தீயிட்டு குண்டம் செய்து அதில் புலி , சிங்கம் , பசு , கருடம் , வில் உருவம் : இவற்றுடன் அம்மன் கரகம் எடுத்துக் கொண்டு அருளாடி படி நடந்து
வருவார்கள் அவ்வாறு குண்டதை கடந்தவுடன் ஊர் மக்கள் எல்லாம் பூமியில்
படுத்துகொள்வார்கள் அவர்கள் மீது சிலைகளை தூக்கி கொண்டு நடந்து செல்வார்கள் ,
அவ்வாறு படுத்திருந்தால் தான் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை .
சாமி அருளாடி வந்தால்
மட்டுமே குண்டத்தில் இறக்குவார்கள் அன்று அருள் வரவில்லை என்றால் அடுத்த நாள்
வந்து சாமி அழைத்து குண்டத்தில் இறக்குவார்கள்
வேப்பமரம் , வன்னி மரம்( கூவிளமரம்) , அரசமரம் . இவற்றிற்கும்
பூசை நடக்கும்
பூசை முறைகள்
பொதுவாக அம்மன் வழிப்பாடு என்றாலே
நான்கு அம்மன் மற்றும் முனியப்பன் , புலி , சிங்கம் , கருடம் , வில் உருவச்சிலை மேலும் கரகம் இவற்றுக்கு ஆடு மற்றும் கோழி
பலியிடுவர் . பசு சிலைக்கு உயிர் பலி கிடையாது . இது ஊர் பொதுவாக
நடைப்பெறும் . மற்றப்படி அவர் அவர் வேண்டுதல்படி கோழி , ஆடு பலியிடுவார்கள் ,
அடுத்து நாள் விளக்கு தட்டு மற்றும் காய்
பழம் படைப்பர்..
செவ்வாய்க்கிழமை அன்று கூழ் ஊற்றுவார்கள் . இதை அனைத்து சமுக மக்களும் வந்து வாங்கி
செல்வார்கள்
ஊரே அழகாக இருக்கும் வான வேடிக்கைகள் நடத்தப்படும் .
இரவு நேரத்தில் சிலம்பாட்டம் , உறியடித்தல் , வழுக்கமரம் ஏறுதல் மற்ற கிராம கலைகள் , மாடு அடக்கல் , ஆடல் பாடல்
,மேலும் வன்னியன் பிறப்பு நாடகம் , பாரதம் , உள்ளிட்ட நாடகம் நடிக்கப்படும்,மாட்டு
பரிசை நடக்கும் முன்பெல்லாம் குதிரை பரிசை நடக்கும் இப்ப இது அதிகம் கிடையாது.
அம்மக்களே கரகம் எடுத்து ஆடுவார்கள் புலி , சிங்கம் , பசு , கருடம் , வில் மற்றும்
கரகம் இவற்றை அனைத்து வன்னியர் குல சத்திரியர் வீட்டிற்கும் கொண்டு வரப்பட்டு பூசை
நடத்தி மகிழ்வார்கள் பறை முழங்க
பம்பை சத்தம் செவியை பிளக்கும் . இந்த வழிப்பாட்டை ஊர் கவுண்டர் , நாட்டுகவுண்டர்
, மந்திரிகவுண்டர் , கோல்கார கவுண்டர்
, பொன்ற வன்னியர் குல சத்திரியர் மட்டுமே
முன் நின்று நடத்துவர்
இவ்வாறு அம்மன்
வழிப்பாடு அதிகமாக தருமபுரிபகுதியில் வழிப்படுவார்கள் மிக பெரிய அளவில் விழா நடக்கும் இடங்கள் காட்னாம் பட்டி, இண்டூர் , சோம்பள்ளி ,
மாறண்டள்ளி பட்டாளம்மன் , புதூர்
மாரியம்மன் , அதியமான் கோட்டை . போன்றவை மிக பிரமாண்டமாக நடக்கும் மற்றபடி எல்லா ஊர்களிலும் அம்மன் வழிப்பாடு
நடத்தூவார்கள் அதுவும் குறையில்லாமல்
சிறப்பாக இருக்கும்
நம்
அரச வம்சத்தின் சிறப்புகளை நம் சத்திரிய வம்சத்தின்சிறப்பை நம் ராஜபுத்திர வம்சத்தின் சிறப்புகளை நம் வரலாறுகளை நாம் தான் வெளிபடுத்தவேண்டும் .