குல தெய்வம் பெரியாண்டச்சியம்மன் வாழிபாடும்
வன்னியர்
குல சத்ரியர்களும்
பெரியாண்டச்சி சிலை படுத்த மாதிரி இருக்கும்
சிலையின் கிழ் அரக்கனை வேல் கொண்டு குத்துவதாய் காட்சிதரும் . பெரியாண்டச்சி
சிலையைச் சுற்றி 108 சாமிகள்தனித் தனியாக இருக்கிறது . அதில் சில பேர் மாதேஸ்வரன்
, மாரியம்மா , பத்திரக்காளி , களியம்மன் . இந்த மாதிரி 108 சாமிகள் உள்ளது . இதை
நடத்தி வைக்கும் பெரியவர்கள் மொத்தம் 1300
கோம்பு குடும்பத் தலைவர்கள் கலந்து
ஆராய்ந்து நடத்துவார்கள் . இதில்
வன்னியர் குல சத்ரியர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் மற்ற எவருக்கும் இங்கு
அனுமதி கிடையாது . பூசை செய்வது வன்னியர் குல சத்ரியர்கள் மட்டும்தான் .
அசைவம் உண்ணும் சாமி மாரியம்மா , பத்திரக்காளி , களியம்மன்
மினியப்பன் (முனியப்பன்) ஒங்காளியம்மன் என
இதற்கு பூசை நடத்தி படையல் இடுவர் . ஆம்
அசைவம் உண்ணாத சாமிக்கு முதலில் பொங்கல் மற்றும் பழம் போன்று படையல் இட்டு பூசைகள்
நடத்துவார்கள் . மூன்றுப் பிரிவாக
இருக்கிறதாம் முதலில் பெரியாண்டிச்சி , வினாயகர் , கருப்பசாமி , ஜயனாரப்பன் எனும்
வேறு வேறு இடத்தில் உள்ளது . முதலில் விநாயகர் கோவிலுக்கு பூசை நடக்கும் . பிரிந்து சென்று வேறு ஊரில் உள்ளவர்கள் அனைவரும் இங்கு வருவர் .
விநாயகர் கோவிலூக்கு முதல் நாளே
வரவேண்டும் அந்தவிழாவிற்கு தெவம் என்று
பெயர் விநாயகர் காப்பரை செய்வார்கள் பச்ச பந்தல் செய்து புங்க மரத்தை கட்டி மறைத்து
விடுவார்கள் கப்பரானை கோதுமை கலி செய்து தலை மற்றும் உடல் செய்வார்கள் . ஐந்து
முகம் 11 கண்கள் இதில் இருக்கும் . முதலில் இருக்கும் இரண்டு முகம் இரண்டு முட்டை
நடுவில் இருப்பதை விட்டுவிட்டு கடைசியில்
இருக்கும் கண்களுக்கு முட்டை நடுவில் பெயிண்ட் கலர் பூசி விடுவர் நடுவில்
இருக்கும் உருவத்திற்கு கண்கள் மூன்று இதனால் இதை முக்கண் ஈஸ்வர் என்று பெயர் .
ஒரு கண் நெற்றிலும் மற்றபடி இருகண்கள் இருக்கும்
ஆக மொத்தம் 11 கண்கள் மூக்கு , வாய் , பல் , கால் கை போன்றவைக்கு கலர் பூசுவார்கள் பல்
சிங்கப்பல் இது கலியில் தான் செய்வார்கள்
. இதை உருவத்தை பங்காளிகள் மட்டும் தான் செய்வார்கள் . இந்த கப்பரையை ஜோடிச்ச பிறகு அதை அந்த பாங்காளிகல் மட்டும் தான் தூக்க
வேண்டும் . கோவில் பூசாரி தூக்கும் வழக்கமும் உண்டு . இந்த கப்பரைக் கண் திறக்கும் போது எதிரில் யாரும் இருக்க
கூடாது . இருந்தால் அவர் இறந்துவிடுவார் , கண் திறக்க ஒரு மச்சம் இல்லா கருப்பு
ஆடு பலி கொடுப்பார்கள் . அந்த கப்பரையைக் கோவில் பூசாரி உள்ளிட்டோர் 2 கிலோமீட்டர்
தொலைவில் உள்ள அறல் (மாலையம்மோடு) கோவிலுக்கு தூக்கி செல்வார்கள் . அங்கு செல்லூம் போது போர் வாள்
கத்தி அருவா கேடையம் வில் போன்றவையும்
தூக்கி செல்கிறார்கள் . அவர்களுடன் மக்களும் செல்வார் இது எல்லாம் இரவில் தான்
நடக்கும் . எப்படியும் பெரியாண்டிச்சி கோவிலூக்கு இரவு 2 மணிக்கு எல்லோரும் சென்று விடுவார்கள் . 10,000 வீடுகளுக்கு
மேல் மக்கள் இருப்பார்கள் .
கோவிலுக்கு
வந்த பின் பெரியாண்டிச்சி தலைமாட்டுள தெற்கே கப்பர முகம் வடக்கில் தெரியும் படி வைக்க வேண்டும் . காலை 5 மணிக்கு வந்து பொங்கல் எல்லோரும் வைக்கிறார்கள்
பூசை நடக்கும் போது ஆடு மட்டும் பலியிடுவார்கள் . பின் பங்காளிகள் எல்லாம் சற்று தொலைவில்
நிற்க்க பூசாரிகள் நன்றாக இரத்தம் , பொங்கசோறூ
கலந்து கையில் உண்டைபிடித்து
மற்றொருவர் தண்ணிர் தெளிக்க இந்த உண்டை சோற்றை வீசுவார்கள் . இந்த
திருவிழா வெள்ளிக்கிழமை நடக்கும் அடுத்த வெள்ளிக்கிழமை மறுபூசை நடக்கும் .
வீட்டிற்கு ஒருவர் சென்று வெள்ளிக்கிழமை பொங்கள் வைக்கிறார்கள் . கோவிலிலே பானைகள்
பொங்கல் வைக்க தருகிறார்கள் . எல்லோருடைய பானையில் இருந்து ஒவ்வொரு கரண்டி எடுத்து
சென்று . முதலில் பெரியாண்டிச்சிக்கும் பின் அரக்கனுக்கும் படைபார்கள் அதற்கு அப்புறம் பூசைகள் நடக்கும் . இது
மிகவும் சக்தி வாய்ந்த்து எங்கள் குல தெய்வம் என்கின்றனர் இம் மக்கள் .
முன்பு 15
நாட்கள் விடாமல் பூசை நடக்கும் அந்த நாட்களில் மஞ்சள் நிறம் வேட்டி தூண்டு
கட்டவேண்டும் . செருப்பு போடக்கூடாது .
யாரும் மற்றவர் வீட்டில் தண்ணீர் கூட குடிக்க கூடாது .
இந்த
கோவிலை அரசாங்கம் எடுத்துக்கொள்ள அபகரிக்க
நினைத்தது ஆனால் அது நடக்க விடவில்லை இம் மக்கள் இந்த கோவில் பற்றியும் இடம்
பற்றியும் வெளிபடுத்த கூடாது என்று கூறியுள்ளனர்
பெரியாண்டிச்சி (தூர்கை,சிவன்
) ,
பெரியாண்டவர் (சிவன்,பூதம்
) , வேடியப்பன் ( நடுகல்) , சாக்கியம்மன் , மழவராயன் , இந்த ஐந்தும் அடங்கிய வழிபாட்டையும் வன்னியர் குல
சத்ரியர்கள் ஒன்றாக ஒரே விழாவாக
செய்கின்றனர் . அதைபற்றி மிகவிரிவாக பிறகு பார்ப்போம் .