அய்யனாரப்பன்கருப்பசாமி
வழிபாடு
தகவல் வழங்கிய சகோதரி தீபா தருமபுரி அவர்களுக்கு நன்றி
வைகாசிமாதம்
15 ஆம் நாள் தெவம் செய்வாங்க வைகாசிமாதம்
முதல் வாரத்தில் செவ்வாய்க்கிழமை பூ போடுவாங்க அன்றக்கு பங்காளிகள் அனைவரது வீட்டில் இருந்தும் ஒருவர் கண்டிப்பாக கோவிலுக்கு வர வேண்டும்
தேங்காய் பழம்
, உடைத்து வைத்து பூசாரிகள் பங்காளிகள்
அனைவரும் பூவை சாமி மீது தூவுதல் இதனை பூ போடுதல் என்று அழைப்பார்கள்
பூ போட்டதில் இருந்தூ 15 நாள்
விரதம் இருப்பார்கள்
விரதம் கடைபிடிக்கும் முறை
செருப்பு அனியாமல் இருத்தல்
பங்காளி வீட்டில் தவிர மற்ற யார் வீட்டிலும் தண்ணிர் கூட குடிக்காமல் விரதம் இருப்பர்
விழா தொடக்கம்
வைகாசி 14 ஆம்
நாள் பூசகுடை எடுப்பார்கள் வீட்டில் இருந்து கிடைக்கும் பழம் , தேங்காய் , ஊதுபத்தி ,
கற்பூரம் , சிவப்பு , மஞ்சல் , பூக்கள் , தெண்னம்பாழைப்பூ , இவை அனைத்தும் வைத்து
அழங்கரித்து. வீட்டிலிருந்து கிழம்பி திங்கள் கிழமை இரவு 10 மணிக்கு கோயில்
வீட்டிற்கு எடுத்து சென்று இருக்க வேண்டும்
அனைத்து
பங்காளிகளும் அன்று இரவு வீட்டிற்கு ஒரு பூசகுடை இது போல் அழங்கரித்து கோயில்
வீட்டிற்கு எடுத்து சென்று இருக்க வேண்டும்
கோயில் வீடு என்பது கோயிலூக்கு சார்ந்த கோயில்
பங்காளிகள் அனைவரும் வரி கொடுத்து கட்டப்பட்டது இது கோயிலூக்கு செல்லூம் ஒரு மயில்
முன்னால் இருக்கும் . இதை அன்று சுமார் 3
மணிக்கு விடியகாலையில் பூச குடையை அனைத்து
பங்காளி குடும்பத்தில் விரதம் இருக்கும் ஆண் , பெண் வீட்டிற்கு ஒருவர் பூச குடையை தலையில் வைத்கு அருள் வந்து
ஆடிக்கிட்டே செல்வாங்க
பம்பை மேலம் முழங்க , தாரை முழங்க பூசாரி பங்காளிங்க
பூச குடைக்கு முன்னால் ஆடிக்கிட்டு போவாங்க .காலை 4 மணிக்கு கோயில மூண்று சுத்து
சுத்தி பூசகுடையை பதியில இரக்கி வைப்பாங்க. கருவறையை பதி என்று சொல்வாங்க . இதில்
பெண்கள் யாரும் உள்ளே சென்று சாமி கும்பிட
கூடாது .
விடிந்த்தும் பங்காளிகள் வீட்டிற்கு ஒருவர் பொங்கள்
வைப்பார்கள் . பொங்கள் வைத்து பூசை
செய்து அனைவரது கிடாயினையும் வரிசையாக
நிக்க வைத்து பூசை போட்டு நீர் கிடாயின்
மீது போட்டு குளுக்கிய பின்னர் கிடாவை
வெட்டுவாங்க .
பன்றி ஒன்ன வாங்கி கேயில் முன்
நிறுத்தி பெரிய ஊசியை வைத்து ஒரே குத்து
குத்தி சாகடிப்பாங்க அந்த பன்னி ஈரல் அதை சுட்டு தழுவையில் வைப்பார்கள் . தழுவு
என்பது அனைத்து பங்காளிகளின் பொங்களில் இருந்து ஒரு கரண்டி அளவு சாப்பாடு எடுத்து
வாழை இலையில் வைத்து படைப்பாங்க . இதை தழுவு என்று சொல்வாங்க . அந்த தழுவையில்
சுட்ட பன்னி ஈரலை வைத்து சாமி கும்பிட்டுவார்கள் கடைசியான பூசை இதுதான் .
சிலர் மட்டும்
கோயில் முன் விருந்து வைப்பார்கள்
எல்லோரும் வீட்டிற்கு செல்வர்
வீட்டிற்கு சென்று வீருந்து வைப்பார்கள் .
எங்கள் குல தெய்வம் அமைந்துள்ள இடம் ஒமலுரில் இருந்து தாரமங்களம் செல்லும் வழி காடம்பட்டி .