ஞாயிறு, 20 நவம்பர், 2016

வன்னியர் வழிபடும் நடுகல் வழிபாடு (வேடியப்பன் , முனியப்பன் )



            நாம் வழிபடும் நடுகல் வரலாறு (வேடியப்பன் , முனியப்பன் )
வீரனின் புகழும்  செயற் கரிய செயலும் வரைந்த கருங்கல்லை அவனை புதைத்த இடத்தில்  நட்டு தெய்வமாக வணங்கப்படும் . அந்த கல்லுக்கு நடுகல்  எனவும் வீரக்கல் எனவும் பெயர் .

அரம்போழ் நுதிய வாளி அம்பின்
நிரம்பா நோக்கின் நிரையங் கொண்மார்
நெல்லி நீளிடை எல்லி மண்டி
நல்லமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்
பீலி சூட்டிய  பிறங்குநிலை நடுகல்
வேலூன்று பலகை வேற்றுமுனை  கடுக்கும்.
                __ நோய்பாடியார், அகம் . 67: 5_11
வீளை அம்பின் விழத்தொடை மழவர்
நாளா உய்த்த நாமவெஞ் சுரத்து
நடைமெலிந் தொழிந்த சேட்படர் கன்றின்
கடைமணி உகுநீர் துடைத்த ஆடவர்
பெயரும் பீடும் எழுதி அதர்தொறும் 
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்
வேலூன்று பலகை வேற்றுமுனை கடுக்கும் .
               ____மதுரை மருதனிள நாகனார்  , அகம் . 131:6_12

அயலார் வந்து கவர்ந்து சென்ற பசுக்களை மீட்கச் சென்ற  வீரன் போரில் மாண்டான் . அவனூடைய பெயரையும்  பெருமையையும் எழதி நட்ட வீரக்கல் காட்டில் வழிகளில்  இருக்கும்  அக்கல்லின் பக்கத்தில் வேலூம்  கேடயமும்  நட்டிருக்கும் .
    செல்லா நல்லிசைப் பெயரொடு நட்ட
    கல்லேசு கவலை யெண்ணுமிகப் பலவே .
                  ________மலை. 388  - 389
நடுகல்லுக்கு நாள்தோறும் பூசை நடத்தப்படும்
இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்
புடைநடு கல்லி னாட்பலி யூட்டி
நன்னீ ராட்டி நெய்ந்நறைக் கொளீஇய
மங்குன் மாப்புகை  மறுகுடன்  கமழும்
               ---புறம் 329 -:1-4
நாள்தோறும் நடுகல்லுக்கு நல்ல தண்ணீர்ல் அபிஷேகஞ்
செய்து நெய்விளக்கு ஏற்று , கள்ளைப் படைத்து  வாசனை தூபங்காட்டும்போது புகை வீதியில் சூழ்ந்துகொள்ளும்.
நடுகற் பீலி சூட்டி நாரரி
சிறுகலத் துகுப்பவுங் கொள்வன் கொல்லோ
                             --புறம் 232:3-4
அதியமானின் நடுகல்லுக்கு நாள்தோறும் கள் படைக்கப்பட்டது .
மக்கள் நடு கல்லைத் தொழுவார்கள் .
சிற்றூரில் ஒருத்தி நடுகல்லைத் தொழது , நான் விருந்தினரை வரவேற்று உபசரிக்க  வேண்டும். என் தலைவனும்  வேந்தனும் மாற்றார்  ஊரிலிருந்து  கொண்டிப் பொருளைக் கொண்டுவரப் பெரும் பகைமை யுண்டாக வேண்டிக் கொண்டாள் . (புறம் .306) .

செங்கம் வட்டம் சாத்தனூரில் வேடியப்பன் கோயிலில் கி.பி 911 – ல் செதுக்கப்பட்ட முதலாம்  பராந்தக சோழன்  கல்வெட்டில் , கோப்பரகேசரி பன்மக்கு யாண்டு  நான்காவது  வேட்டுவதி அரையர் வாணகோவரையர்  ஆள் ஆனைமங்கலம்  முடைய கள்ளன்  தாழன் மேல் கோவல்லூர் நாட்டு அளவிப்பாடி தொறு மீட்டுபட்டான் மன்றாடி கல்  என்று சொல்லப்பட்டிருக்கிறது . (செங்கம் நடுகற்கள் தொடர் எண் : 1971 / 39)


சங்க இலக்கியங்கள் வீரர்களூக்கு எடுக்கபட்ட நினைவுச் சின்னங்களைப் பதுக்கை நடுகல்  நெடுகல் என்றும் கூறூகின்றன.  வீரனின் நினைவாக நட்டகல் நடுகல் என்று பெயர் பெற்றது  . தற்போது தகடூர் பகுதியில் நடுகல்லை பல பெயர்களில் அழைகின்றனர் . வேடியப்பன் கோயில் , வேடன் கோயில் , ஐயனார் அப்பன் கோயில் , சிலைகல் , வேடியப்பன்கல், கிருஷ்ணாரப்பன் கோயில் , முனியப்பன் கோயில் போன்ற பெயர்கள் உள்ளன . இவைகளுடன் அந்தந்தப் பகுதியில் அமைப்பிற்கு ஏற்ப நொண்டி வேடியப்பன் , ௐட்டைவேடியப்பன் , முனியப்பன் , ஐயனார் அப்பன் எனும் சொல்வழக்குகள் காணப்படுகின்றன . இவற்றில் வேடியப்பன் , முனியப்பன் , அய்யனார் அப்பன் ஆகிய பெயர்கள் அதிக அளவில் பயண்பாட்டில் உள்ளன .
ஒசூர் அருகில் 90 நடுகற்கள்  ஒரே  இடத்தில் உள்ளன . இதை தொட்டவர் குடி என்று இப்பகுதி  மக்கள் கூறுகின்றனர் . தொட்டவர் குடி என்றால் இறந்த வீரர்களின் கேயில் என்று கன்னடத்தில் பொருள் உள்ளது .
ஐயூர் முடவனார் பாடலில் ஒரு ஊரில் பல நடுகற்கல் இருந்த்தாக கூறூகிறார் .
நடுகல் அமைப்பு
    சில நடுகற்கள் தனியாக மேடான பகுதிகளில் உள்ளன . பல நடுகற்களைச் சுற்றிலும் வீடு போன்ற அமைப்பில் கல்வீடு அமைக்கபட்டுள்ளது . வீரனின் உருவம் உள்ள கற்பலகை மோற்குப் பக்கதிலும் , மற்றத் திசைகளான வடக்கு , தெற்கு திசையில் இரணாடு  பலகைக் கற்களை அமைத்து இதன்மேல் மூடுகல் ஒன்றை வைத்து மூடி கற்கோவிலாக அமைக்கப்பட்டுள்ளது . பெரும்பாலான நடுகற்கள் இவ்வமைப்பிலே உள்ளன  . மற்றொரு வகை கிழக்குப்பக்கம் நூவைவாயில் போன்று திறந்த வெளியாக அமைக்கப்பட்டுள்ளன . இவை பெரும்பாலும் கிழக்கு நேக்கி  அமைந்திருக்கும் .  சில இடங்களில் உள்ளவை ஒரு கல்வீட்டை மையமாக்கொண்டு மற்றத் திசைகளிலூம் அமைக்கப்பட்டுள்ளன .
பட்டினப்பாலை , நடுகல்லைச் சுற்றிலூம் அரன் போன்று  வேலும் கேடயமும் நடப்பட்டிருந்தன என்று  கூறுகின்றது . மலைகள் நிறைந்த வழியில்  நடுகற்கள் உள்ளன . இதில் கடவுள் உறைகின்றார் என்ற நம்பிக்கை  இருந்த்தை  மலைபடுகடாம் கூறுகின்றது . பெரும்பாணாற்றுப்படையில் குலத்தலைவன் ஆநிரைகளை காக்க   மறவர்  மழவர்களை வைத்திருந்தான் என்று வருகிறது இதை மலைபடுகடாம் பாடலிலும் காணப்படுகிறது . நடுகற்கள் அதியர் , மலையமான் , நன்னன்  ஆகியமரபினர்களிடையே இருந்தது . என்பதை இலக்கியங்கள் கூறுகின்றன. மற்ற மரபினர்களிடையே இந்த வழக்கம் இருந்ததாக கூறப்படவில்லை . தகடூர் , திருவண்ணாமலை , செங்கம் , அரூர் , ஊத்தங்கரை  , கிருட்டிணகிரி ஒசூர் பகுதிகளில் நடுகற்கள் அதிக அளவில் உள்ளள . இப்பகுதியில் இருந்த சங்ககால அரச மரபினர்கள் அதியர், நன்னன் ,  மலையமான் போன்ற அரசமரபினர்கள் ஆவர் . பல்லவர் , கங்கர், பாணர் போன்றவர்களின் பெயருடன் கூடிய நடுகற்கள் கிடைக்கின்றன. 
வழிபாடு
       சங்க காலத்தில் நடுகற்களை வழிப்பட்டது போன்று இன்றும்  வழிபடுகின்ற வழக்கம்  பரவலாக்க் காணப்படுகின்றது என்பது கள ஆய்விலிருந்து தெரியவருகிறது . தகடூர் , வட ஆர்காடு மாவட்டங்களில்  நடுகற்களை வழிவழியாக வழிபடுகின்ற வழக்கம் உள்ளது . இதனைப் பொங்கல்  மற்றும் ஆடிபெருக்கு போன்ற  நாட்களில்  வழிபடுகின்றனர் . பொங்கலில் முதலில் ஆன்றோர் வணக்கம் எனப்படும் நடுகல்லை வழிபட்ட பின்னர்தான் மற்றக் கடவுள்களை வழிபடுகின்ற வழக்கம் காணபடுகிறது. பொங்கல் நாள் அன்று மாலையில் நடுகல்லை வழிபடுவர் . அன்று நடுகல்லின்  அருகில் பொங்கல் வைத்து , படைத்து , கோழி , ஆடு போன்றவற்றை பலியிடுவார்கள் . மது வகைகளையும் படைப்பது வழக்கம் . இந்த நாட்களில் நேர்திக் கடனாக மண்ணால் செய்த சுடப்பட்ட பொம்மைகளையும் சூலத்தையும் வைப்பார்கள் . நடுகல்லை வழிபடுவர்கள் வெளியூரில் இருந்தாலூம் அந்நாளில் இங்கு வந்து தங்கி வழிப்பட்டுச் செல்வர் . இந்த நடுகல்லை ஒரு குறிப்பிட்ட இரத்த உறவு கொண்டவர்கள் (வன்னியர் குல சத்ரியர்) மட்டும் வழிபடுகின்றனர் . என்பது குறிப்பிடத்தக்கது. சில இடங்களில் தீபவிளக்கு ஏற்றி வைப்பது  வழக்கமாகவும் இருந்து வருகின்றது . 

தாழி வகை பயன்படுத்திய தஞ்சை , திருச்சி , மதுரை போன்ற பகுதியில் நடுகற்கள் எடுக்கும் வழக்கம் இல்லை . எனவே தாழியை ஈமச்சின்னமாகக் கொண்ட சமுகப் பிரிவினர்களிடையே நடுகல் வழக்கம் இல்லை என்பது தெரிகின்றது .சான்று (பாண்டிமாதேவி , ஆவி முதல் ஆண்டவன் வரை , பாவலர் பண்ணை , முத்துராமலிங்கபுரம்)
அடிக்குறிப்புகள்
1 தமிழத் தொல்லியலும் வரலாறும்(தகடூர் பகுதி) தி. சுப்பிரமணியன் .may 2009. New centry book house
(  இந் நூல் முழுமையும் எடுத்துகொள்ளபட்டது அதில் இருப்பது போல் வரி உட்பட  இங்கு தரப்பட்டுள்ளது )
2 புறம் 263 , 260
3 அகம் . 297 , 365 269 .291
4 மலை.ப. 394-396 , 279 .
5 பெருபைண்.வரி.140 -141
6 செங்கம் நடுகற்கள் , எண் ,1972/73
7 நா. வானமாமலை , நடுகற்களும் நம்பிக்கைகளும் , semi-nar on hero stons , 1974 pp 51-52.
8 வெ . கோசவராஜ் , தென்னிந்திய வீரக்கற்கள் – ஒர் ஆய்வு , (முனைவர் பட்ட ஆய்வேடு) கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம் , 1985 ப.310.